வெறும் 45 நாட்கள் பதவி! லிஸ் டிரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள்!
வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஸ்லி ட்ரஸ்சுக்கு கோடிக்கணக்கான ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது.
அவர் சில வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்து இருந்தாலும் கூட அவருக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் கிடைக்கவுள்ளது.
பிரிட்டனில் உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை அவர் பெறலாம் என கூறப்படுகிறது.
மரணமடையும் வரை ஓய்வூதியம்
குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் மரணமடையும் வரை முன்னாள் பிரதமர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓய்வூதியங்கள் அளிக்கப்படும். சில வாரங்கள் பதவியில் இருந்தாலும் லிஸ் ட்ரஸ்சுக்கு காலம் முழுக்க ஓய்வூதியம் கிடைக்கும்.
ஆண்டுக்கு இலங்கை மதிப்பில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அவர் ஓய்வூதியம் பெறலாம்.
பலத்த எதிர்ப்பு
எனினும், இதற்கு அங்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
லிஸ் ட்ரஸ் வெறும் சில வாரங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தார் என்பதால் அவருக்கு இந்த ஓய்வூதியத்தைக் கொடுக்கக் கூடாது என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
அப்படியில்லை என்றால் லிஸ் ட்ரஸ்சே தானாக முன்வந்து இந்த ஓய்வூதியத்தை மறுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருவதாக அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன
கருத்துக்களேதுமில்லை