அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி நூலகத்துக்கு ஒரு நூல் அன்பளிப்பு செய்வோம் வாரீர்…
ஆலையடி வேம்பு பிரதேச கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்துக்கு “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் சிந்தனைக்கு அமைவாக பாடசாலை நூலகத்திற்கு ஒரு நூலை அன்பளிப்பாக வழங்குவோம்.
இப் பாடசாலையில் கல்வி கற்று வெளிநாடுகளில் வசிக்கும்,தொழில் புரியும் பாடசாலையின் பழைய மாணவர்களும் இந்நூலகத்தின் அங்கத்துவர்களே, வாசகர்களே ….
பழைய மாணவர்கள் அனைவரும் பாடசாலையின் நலன் விரும்பிகளே……
எமது பாடசாலை மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தி அவர்களை சிறந்த வாசகர்களாகவும், அறிவாளர்களாகவும் உருவாக்குவதே நூலகத்தினதும் சமூகத்தினதும் நோக்கமாகும்.
எனவே
இந்த பணி வெற்றி பெற இன்று முதல் நூல்களை அன்பளிப்பு செய்ய விரும்பும் அன்பு உள்ளங்கள் எனது 0760359384 அல்லது 0771223462 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவே தொடர்பு கொண்டு பாடசாலை அதிபர் திரு.J. R. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் ஊடாக அன்பளிப்புச் செய்ய முடியும்.
நீங்கள் வழங்கும் நூலில் உங்கள் பெயர் அச்சிடப்பட்டு அன்பளிப்பு வழங்கும் தினத்தில் இருந்து புத்தக பதிவேட்டில் பதியப்பட்டு நூலகத்தில் வைக்கப்படும்.
எனவே இன்று முதல் இவ் நற்பணிக்கு உரமிட உங்கள் அனைவரினதும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்.
உங்கள் எண்ணங்களில் “தனிமை தரும் அற்புத சுகங்களில் ஒன்றுதான் புத்தகங்கள் வாசிப்பது”
என்ற வாசகத்திற்கு அமைவாக ஒரு நூலையாவது வழங்கி உள்ளச் சுகங்களுக்கு வழி செய்வோம்!
இவ்வண்ணம்
சி. சிறிக்காந்தன்
நூலக பொறுப்பாளர்.
கருத்துக்களேதுமில்லை