திட்டமிடப்படாத அபிவிருத்திகளால் பொதுமக்கள் பாதிப்பு-நகரசபை உறுப்பினர் நடனதேவன்.
சரியான திட்டமிடப்படாத அபிவிருத்திகளால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
தற்போது இடம்பெறுகின்ற பல அபிவிருத்திப் பணிகள் தன்னிச்சையான உரிய திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன.இதனால் அப் பகுதி மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
அண்மையில் கூட சாவகச்சேரி தபால் நிலைய வீதியில் வடிகாலமைப்பு வேலைகள் நிறைவடைந்த பின்னரும் வீதியில் பெருமளவு வெள்ள நீர் தேங்கி பயணிக்க முடியாத நிலைமை காணப்பட்டது.அதன் பின்னர் பிரதேச மக்கள் வடிகாலமைப்பில் துளையிட்டு வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தை கடத்தியிருந்தனர்.கடந்த வருடம் இதே போன்ற வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது நகரசபை உறுப்பினர்கள் சிலர் வீதிகளில் சிறிய துளையிட்டு வெள்ளத்தை கடத்திய போது பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக எம் மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.ஆனால் இன்று மக்களே அந்தப் பணிகளை செய்யத் துணிந்துள்ளனர்.சரியான திட்டமிடல் இல்லாத அபிவிருத்திகளால் தான் இந் நிலை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.அபிவிருத் தியின் போது உரிய திட்டமிடல் மற்றும் பிரதேச மக்களின் ஆலோசனையுடன் பணிகள் இடம்பெற்றால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள். என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை