காங்கேசன்துறை மாவட்ட சாரணர் சங்கத்தின் 42வது ஆண்டு தினம்.
காங்கேசன்துறை மாவட்ட சாரணர் சங்கத்தின் 42வது ஆண்டு தினம் அண்மையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும்-சாரணர் சங்க செயலாளருமான கிருபானந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.இரவிச்சந்திரன் கலந்து சிறப்பித்திருந்தார்.மேலும் யாழ்ப்பாண கல்லூரி முதல்வர்,சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அதிபர்,இலங்கை சாரணர் சங்க தலைமை ஆணையாளர்,காங்கேசன்துறை சாரணர் மாவட்ட ஆணையாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை