யாழில் பெண் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் வட்டமேசை கலந்துரையாடல்..
யாழ் மாவட்டத்தில் சமாச பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் வட்ட மேசை கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் முற்பகல் 10 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் பெண் உற்பத்தி முயற்சியாளர்களின் சந்தேகங்கள் தொடர்பில் வங்கிகளின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டதோடு தமது வங்கிகளினால் வழங்கப்படும் இலகு கடன் திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் விழுதுகள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைத்திரேயி ஆற்றி வரும் பணிக்காக பெண் முயற்சியாளர்களால் கெளரவிக்கப்பட்டார்.
கருத்துக்களேதுமில்லை