18 வயதான பிரதான போதைப்பொருள் முகவர் – இரகசிய தகவலில் கைது

ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வாழைச்சேனை புகையிரத நிலைய வீதிக்கு அருகில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

 

18 வயது மதிக்கவர்

18 வயதான பிரதான போதைப்பொருள் முகவர் - இரகசிய தகவலில் கைது | Drug Use Police Investigating Srilanka

இவ்வாறு கைதான நபர் பிரைந்துறைச்சேனை பகுதியை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 6 கிராம் 500 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர் பயணம் செய்த உந்துருளியையும் மீட்கப்பட்டுள்ளது.

18 வயதான பிரதான போதைப்பொருள் முகவர் - இரகசிய தகவலில் கைது | Drug Use Police Investigating Srilanka

 

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் வாழைச்சேனை காவல்துறையினரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.