வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் – வெளியானது அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்வேருக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற சட்டங்களை நீக்கி, புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என சவுதி அரேபியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்பவர்களின் பாதுகாப்பு முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

உரிய தொழில் பயிற்சி

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்டங்கள் - வெளியானது அறிவிப்பு | Immigration Department New Law Manusha Nanayakara

எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு உரிய தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களில் செயற்படுமிடத்து, நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.