சிறிலங்காவை மீள எழுப்புவதற்கான எதிர்கட்சி முன்வைத்த ஆறு தீர்வுகள்!

நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கான ஆறு தீர்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (21)நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

சரிபார்க்கப்பட்ட தகவல் ஆதாரங்கள் மற்றும் தரவுகளை முறையாக சபைக்கு சமர்ப்பித்த வன்னம் இவ்வாறு தீர்வுகளை முன்வைத்தார்.

இந்த ஆறு தீர்வுகள் குறித்து அவர் உரையாற்றுகையில்,

இருப்புக்களின் மீதான கருதப்பட்ட உள்ளீட்டு வரியை 5 இல் இருந்து 10 வீதமாக அதிகரிப்பதன் மூலம் 90 பில்லியன் ரூபா அரசாங்க வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்

 

ஓய்வூதியம் பெறுவோருக்கு ஏற்படும் அநீதி

சிறிலங்காவை மீள எழுப்புவதற்கான எதிர்கட்சி முன்வைத்த ஆறு தீர்வுகள்! | Six Ways To Build Stable Country Instead Unstable

அதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு அநீதி ஏற்பட்டால்,ஈட்டிய வட்டிக்கு மேலதிகமாக 1 சதவீதம் நிவாரணம் வழங்கலாம் இந்த வரி முறைமையை நியாயப்படுத்த முடியுமான போதிலும், உழைக்கும் மக்களுக்கு பாதகமாக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

இது தொடர்பான பல தரவு அறிக்கைகளை ஹன்சார்ட் பதிவுட்குட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று வரிச்சலுகைகள் வழங்குவது தொடர்பிலும் கருத்துரைத்துள்ளார்.

 

சீனி வரி மோசடி

சிறிலங்காவை மீள எழுப்புவதற்கான எதிர்கட்சி முன்வைத்த ஆறு தீர்வுகள்! | Six Ways To Build Stable Country Instead Unstable

உதாரணத்திற்கு சீனி வரி மோசடியில்,50 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைத்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளமையினால்,வரிச்சலுகைகள் வழங்கும்போது சரியான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனி வரி மோசடி காரணமாக அரச வருமானம் 48 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாகவும்,அந்த தவறு எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் திருத்தப்பட்டு இழந்த வரி வருமானம் மீளப்பெறப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்