கடும் வாக்குவாதம் – மருமகனை படுகொலை செய்த மாமா

கந்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய மருமகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை (2) இரவு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு

கடும் வாக்குவாதம் - மருமகனை படுகொலை செய்த மாமா | 28 Year Old Killed By Father In Law

 

தனது மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவரின் மாமனார்,மருமகனை கட்டையால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

கடும் வாக்குவாதம் - மருமகனை படுகொலை செய்த மாமா | 28 Year Old Killed By Father In Law

57 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளையதினம் 4ஆம் திகதி வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கந்தானை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.