இந்தியத் தூதரக உயர்ஸ்தானிகர்   திருகோணமலை சிறார்கள் சந்திப்பு

ஹூஸ்பர்

‘ கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிறார்களாகிய நாங்கள் பாக்கு நீரிணையை 32 கிலோமீற்றர் தூரத்தை நீந்திக் கடந்து சாதணை படைத்தல் ‘ என்ற தொனிப் பொருளில் வை.ஏ.என்.ஏ. நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 15 வயதிற்கு கீழ் உள்ள திருகோணமலையைச் சேர்ந்த சிறார்கள் மேற்படி விடயம் தொடர்பில் முதல் கட்டமாக இந்திய தூதரக உயர்ஸ்தானிகர்  ராகேஷ் நடராஜ் அவர்களை சந்திக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  யாழில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது சுற்றுசூழல் பாதுகாப்பு, கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு, பிளாஸ்டிக் முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு,  செயல் திட்டங்களை வடக்கு கிழக்கில் எதிர் வரும் காலங்களில் செயற்படுத்துவது தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இளம் சிறார்களின் இம்முயற்சியினைப் பாராட்டிய இந்திய தூதுவர், உயர்ஸ்தானிகர் ஆலயத்தினூடாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்களை மேற் கொள்வதற்கு தனது பூரன உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்திய தூதரக உயர்ஸ்தானிகர்  ராகேஷ் நடராஜ் அவர்களை சந்திப்பதற்கான பூரன
ஏற்பாடுகளையும் தொடர்பு ஒழுங்குகளையும் திருகோணமலை றிங்கோ எய்ட் நிறுவனம்
செய்ததுடன் இச்சந்திப்பில் றிங்கோ எய்ட் இன் நிறுவனர், பணிப்பாளர்,
நிகழ்ச்சி முகாமையாளர் ஆகியோரும் வை.ஏ.என்.ஏ.நீச்சல் பாடசாலையின் பணிப்பாளர்
மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.