இன்று மட்டும் 9 பேர் அடையாளம் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 91ஆக அதிகரிப்பு


* இன்று மட்டும் 9 பேர் அடையாளம்
* இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்
* 222 பேர் தொடர்ந்து கண்காணிப்பு
* 3,506 பேர் தனிமைப்படுத்தல்
* முதலாவது நோயாளர் வீடு திரும்பினார்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்று மட்டும் 9 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 இலிருந்து 91 ஆக உயர்ந்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

222 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களில் 3 ஆயிரத்து 506 பேர் தங்கவைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முதலாவது நோயாளர்
வீடு திரும்பினார்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் சிகிச்சையின் பின்னர் நலம் பெற்று இன்று வீடு திரும்பினார்.

இத்தாலி நாட்டவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்ட குறித்த­ நபர் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வார சிகிச்சையின் பின்னர் நலம் பெற்ற அவர், இன்று தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.