அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – கோட்டாவிடம் மாவை கோரிக்கை

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ. சேனாதிராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (28) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மிருசுவில் எண்மர் கொலைக் குற்றவாளியான இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். இந்தநிலையிலேயே மாவை சோ.சேனாதிராஜா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.