யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் ‘கொரோனா!’ – உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று

யாழ்ப்பாணம், தாவடியில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழும் குடும்பங்களில் 18 பேரின் இரத்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் பரிசோதனைக்காக அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமாக அறியவந்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மூவரோடு யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 10ஆக உயர்கின்றது.

யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனாத் தொற்றாளி தாவடியில் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த மத போதகரை நேரில் சந்தித்து உரையாடிய கட்டட ஒப்பந்தக்காரர் ஆவார்.

இதையடுத்து அவர் வாழ்ந்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மத்தியிலேயே தெரிவு செய்யப்பட்ட18 பேரின் இரத்த மாதிரிகள் நேற்றுமுன்தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் மூவருக்கே கொரோனா தொற்று இருப்பதாக நேற்றிரவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாக அறியவந்தது.

இது பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கையை மருத்துவர்கள் இன்று காலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தாவடியில் இரத்த மாதிரி எடுக்கப்பட்ட மற்றைய 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று இருப்பதாகக் காணப்பட்ட மூவரும் இதற்கான சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.