பிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்

‘ஓய்வு பெற்றபோது வழங்கப்பட்ட தொப்பியே எனக்கு எப்போதும் விருப்பமான நினைவுச்சின்னம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்.

அவுஸ்ரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ஓட்டங்களையும், 375 ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களுடன் 13,704 ஓட்டங்களையும், ருவென்ரி – 20 17 போட்டிகளில் 401ஓட்டங்களையும் பெற்றவர் ரிக்கி பொண்டிங்.

அதேபோன்று இருமுறை உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தவர் ரிக்கி பொண்டிங்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதன்போது அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அவரது மனைவியின் மூலம் புதிய சார்பில் தொப்பி ஒன்றை வழங்கியது.

இதனை அவர் தான் அறிமுகமான சமயத்தில் பயன்படுத்திய தொப்பியின் அருகே வைத்துள்ளார். இந்த இரு தொப்பிளும் எனக்குப் பிடித்த நினைவுச் சின்னங்கள்.

140 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டால் ஒரு தொப்பி சற்று மோசமாக உள்ளது என கூறியுள்ளார் ரிக்கி பொண்டிங்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.