இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 183 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (07) பிற்பகல் 4 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, 04 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 183 பேரில் தற்போது 135 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 06 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் வைத்தியசாலைகளில் தற்போது 255 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.