ஆலங்குளாய் கஜனின் அனுசரணையில் இளவாலை மக்களுக்கு உலர் உணவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஆலங்குளாய் சிவராஜா கஜனின் அனுசரணையில் இளவாலைப் பகுதியில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் தொழிலை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இளவாலை யூதாததேயு ஆலயத்தில் வைத்து இந்த உணவுப் பொதிகளை, வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ், உடுவில் பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளர் நிரேஷ், வலி.தெற்கு பிரதேசசபை முகாமைத்துவ உதவியாளர் செ.றொபின்சன் ஆகியோர் கலந்து வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்