கொழும்பில் இன்று விசேட சோதனை
கொழும்பில் இன்று (புதன்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக சுமார் 20 நடமாடும் பொலிஸ் வாகனங்களும் 100 சிற்றூர்திகளும் 300 பொலிஸ் அதிகாரிகளையும் கடமையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலதிகமாக இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை