விடுதலைப்புலிகள் பற்றி கதைக்க யாருக்கும் தகுதியில்லை !யாழ்.மாநகர மேயர்

விடுதலைப்புலிகள் பற்றிய கருத்துக்களை யார் முன்வைத்தாலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என யாழ்.மாநகர மேயர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு சுமந்திரன் வழங்கிய பேட்டியொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் முனவைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக சுமந்திரனோ வேறு எவரோ எந்தவிதமான கருத்துக்களை முன்வைத்தலுமோ அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் சரியா தவறா என்பதற்கு முதல் அதன் உருவாக்கத்தை பார்க்க வேண்டும். தந்தை செல்வா உள்ளிட்டவர்கள் தமிழ் மக்களின் சாத்வீக உரிமைகளை வென்றெடுக்க முயன்று தோற்றுப்போனார்கள்.

அது ஆயுதம் ஏந்தி உரிமைகளை கேட்க்கும் போராட்டமாக மாறியது.ஆயுத ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களும் அது தொடர்பில் பல இடங்களில் நாங்கள் விரும்பி ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல காலத்தின் கட்டாயத்தால் ஏந்தியவர்கள் என்று கூறியுள்ளனர்.இது மறைக்க முடியாத , மறக்க முடியாத வரலாறு என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.