ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனுக்கு வவுனியாவில் நினைவேந்தல்
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் நேற்று(திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.
இதில் வவுனியா ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஐயாத்துரை நடேசனுடைய திருவுருவ படத்திற்கு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தியதுடன் நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது.
கருத்துக்களேதுமில்லை