அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்றைய தினம்  ஆரம்பிக்கப்பட்டது.

4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்களும் வருகைதந்திருந்தனர்.

கைகளை கழுவுவதற்கான வசதிகள் பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் வாசலிலே சுகாதாரம் சம்பந்தமான பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தமை ஆசிரியர்களுக்கும் ,கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்குமானா கலந்துரையாடல் பாடசாலையின் அதிபர் திரு.அ. சுமன் தலைமையில் இன் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.