3.5 மில்லியன் யூரோ மானியம் தொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு

சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க உதவும் வகையில் வழங்கப்பட்ட 3.5 மில்லியன் யூரோவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்துடன் இலங்கை சுற்றுலாத்துறை கலந்துரையாடி வருகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மொத்த மானியத்தில் 22 மில்லியன் யூரோ விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சுற்றுலாத்துறைக்காக 3.5 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுலாத்துறைக்கான குறித்த கொடுப்பனவை 4 மில்லியனாக உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், தலைமை அலுவலகத்திலிருந்து இறுதி அனுமதி பெற காத்திருப்பதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்