ஊழியர் பற்றாக்குறையில் தேசிய கணக்காய்வு அலுவலகம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 1,400 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கணக்காய்வாளர்கள் பற்றாக்குறையினால் கணக்காய்வு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், 165 கணக்காய்வு அத்தியட்சகர்கள் மற்றும் 465 கணக்காய்வு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும், கணக்காய்வாளர் வெற்றிடங்களுக்கு சுமார் 600 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.