அரசாங்கத்திற்கு சவாலான ஒரு சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே – கலையரசன்

அரசாங்கத்திற்கு மிகச் சவாலான ஒரு சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறியின் அழைப்பின் பேரில் காரைதீவு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் நாங்கள் 45 ஆயிரம் வாக்களுக்கு மேல் பெற்றிருந்தோம் கடந்த தேர்தலை விட பத்தாயிரம் வாக்குகள் குறைவாக நாம் பெறுவோமானால் அதாவுல்லா என்ற கடும்போக்கு முஸ்லிம் இனவாதி நாடாளுமன்ற பிரதிநிதியாக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு.

இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது எதை செய்தது என்ற விடயத்தை  எங்களது மக்கள் மத்தியில் வைத்து  பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எமது கட்சியினர் இந்த நாட்டில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை அவை சார்ந்த விடயங்களிலும் அங்கம் வகிக்கவில்லை.

அதன் அடிப்படையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மதிநுட்பமான எமது மக்களின் உரிமை சார் பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்கு கடந்த காலங்களில் செயற்பட்டது ஆனால் இப்பொழுது அந்த ஒற்றுமையை சீர்குலைத்து அதற்காக ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பை துதிபாடும் செயல்திட்டத்தை தான் இங்கு உள்ள சிங்கள ,மாற்று தமிழ் கட்சிகள் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் எங்களை குறி வைத்து முஸ்லிம்களை நாங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள் என இங்கு பேசப்படுகின்றது. நாங்கள் எந்த விடயத்தில் சோரம் போனவர்கள் நாங்கள் அன்று முதல் இன்று வரை ஜனநாயக ரீதியாகத் தான் செயற்பட்டு வருகின்றோம். நமது மாவட்டத்தில் முகவர்களாக வந்துள்ள சிலருக்கு தகுந்த பாடங்களை நாங்கள் புகட்ட வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திற்கு கூலி தொழிலுக்காக வருகை தருபவர்கள்  வீரவசனம் பேசும் கருணாவின் ஊரிலிருந்து தொழிலுக்காக அம்பாறைக்கு வந்த அப்பாவி தமிழர்களே முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.  குறிப்பாக சம்மாந்துறை பிரதேசத்தில் நைனா காடு கிராமமே உருவாக்கப்பட்டுள்ளது.

நம்மையும் நம் மக்களையும் மண்ணையும் காட்டிக் கொடுத்துவிட்டு நயவஞ்சக சிந்தனையோடு செயற்படுகின்ற ஒருவரை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா என்ற கேள்வியை தொடுக்கின்றேன்.

அரசாங்கத்திற்கு மிகச் சவாலான ஒரு சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே எம்மை சின்னாபின்னமாக்கினால் அவர்களுக்கு எந்த கஸ்ரமும் இல்லை இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதில் களம் இறக்கப்பட்டவர் தான் கருணா என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.