எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை: மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் தற்கொலை செய்துள்ளார்.
மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை