உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பிக்கவிற்கு அழைப்பாணை!

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2016ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு உட்படுத்தியமையினை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொலவினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.