குடும்ப ஒன்றுகூடல்…
தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட குதிரைச் சின்ன 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களது தேர்தல் செயற்பாட்டாளர்கள், தேசிய காங்கிரஸ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் குடும்ப ஒன்றுகூடல் சாய்ந்தமருது பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆயிஷா சித்தீக்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, செயலாளர் எம்.ஐ.அப்துல் மஜீட் உட்பட பள்ளிவாசல் நிருவாகிகள், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் அத்துடன் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை