வவுனியாவில் கட்டாக்காளி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள்

வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு நெரிசல் தினசரி ஏற்படுகின்றன.

குறிப்பாக வவுனியா நகரம் , வவுனியா – மன்னார் பிரதான வீதி , பட்டனிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

கட்டாக்காளி மாடுகளினால் கடந்த மாதத்தில் மாத்திரம் 10க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கட்டாக்காளி மாடுகளை கட்டுப்படுத்த நகரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.