வவுனியா ஏ9 வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த பிக்கப்: இருவர் காயம்…

வவுனியா, ஏ9 வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று சாந்தசோலை சந்திப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து ஏ9 வீதி வழியாக ஓமந்தை நோக்கிச் சென்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பிக்கப் வாகனம் சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் பிக்கப் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்