வவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கும் நகரசபை அனுமதி: இடம் ஒதுக்கீடு செய்ய விசேட குழு…

வவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கு நகரசபை அமர்வில் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வாடகைக்கார் ஒடுவதற்கு வவுனியா வைத்தியசாலை முன்பாக ஏற்கனவே நகரசபையால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அனுமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா நகரசபை அமர்வில் குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டதுடன், முச்சக்சக்கர வண்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாடகைக் கார் ஓடுவதற்கும் சபை அமர்வில் உறுப்பினர்களால் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி இரு பகுதியினரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் செயற்பட வேண்டும் என நகரசபை உறுப்பினர்கள் தீர்மானித்ததுடன், வாடகைக்கார் ஒட்டுனர்களுக்கு இடம் வழங்குவது தொடர்பில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்