டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கல்முனை பகுதியில் ஆரம்பம்…

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு   சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில்  டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பான   சுகாதார வைத்திய பணிமனை  எல்லைக்குள் அமைந்துள்ள  கல்முனை 1 கல்முனை 2 பகுதியில்    வீடு வீடாக குறித்த  சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.

இப் பிரதேசத்தில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.கணேஷ்வரன் தலைமையில் தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை முதல் வீடுகள் , கல்வி நிலையங்கள் என்பனவற்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ .சுகுணனின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி    கள நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து இனம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி  ,உள்ளிட்ட  பிரதேச பொது சுகாதார   அதிகாரிகள்,    சுற்று சூழல் பாதுகாப்பு   பொலிஸ் அதிகாரி ,    இணைந்து      காலை முதல்  மதியம் வரை     டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை தொடர்ந்து    மேற்கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.