கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் போக்குவரத்தில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 077 10 56 032 எனும் தொலைபேசியின் ஊடாக அழைக்க முடியும் என போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு பரீட்சைம ண்டபத்திற்கு செல்வதில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் எந்த தடையாகவும் அமையாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

தமது தேசிய அடையாள அட்டை மற்றும் பணியிட அடையாள அட்டையை ஊரடங்கு அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

மேல் மாகாணத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தாலும், ஜிசிஈ உயர்தரப் பரீட்சை வழமையான முறையில் நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த கூறினார்.

எனவே, பரீட்சார்த்திகளும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுவோரும் ஊரடங்குச்சட்டத்தை முட்டுக்கட்டையாக கருதக்கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்..

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டிகள் காலையில் இருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர்  தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டிருந்தாலும் கல்விப் n பாதுத் தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்காக காலையில் இருந்து 6 ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னான்டோ தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.