ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநீதிகள்: விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு தேவை – சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்து…

“ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசினதும் பொறுப்பாக இருந்தாலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான எந்தவொரு குற்றத்துக்கும் நீதி வழங்கப்படாத வரலாறே காணப்படுகின்றது.”

– இவ்வாறு சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது:-

“இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசே தற்போதும் ஆட்சியில் இருக்கின்றது.

இந்தநிலையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற கேள்வி நீதிக்காக குரல் எழுப்பும் ஊடக சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க முழு அளவிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.