வவுனியா- தனிமைப்படுத்தல் நிலையங்களில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியாவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 1154 பேர் வவுனியா மம்பைமடு இராணுவமுகாம், பெரியகட்டு இராணுவமுகாம், வேலங்குளம் விமானபடைத்தளம், பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 127 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.