நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வமத ஒளி விளக்கு பூஜை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வமத ஒளி விளக்கு பூஜை நேற்று(04) மாலை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் புத்தசாசனம் கலாசாரம் மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் வேண்டுகோளுக்கமைவாக விஷேட பூஜை வழிபாடுகள் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி திருமதி எஸ்.சபேஷ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பௌத்த இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய சமயக்குருமார்களினால் தீபங்கள் ஏற்றப்பட்டு விஷேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மத்தியமுகாம் லும்பினி விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய கந்துனே சுஜின்ன ஹிமி, மத்தியமுகாம் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ரி.தேவகுமார் குருக்கள், சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் அருட்சகோதரி வணக்கத்துக்குரிய விந்தினி, ஜம்மியத்துல் உலமா சபையின் சவளக்கடை மத்தியமுகாம் பிரதேச உபசெயலாளர் மௌலவி எம்.எம்.தௌபீக், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், மத்தியமுகாம் கண்ணகி வித்தியாலய அதிபர் எஸ்.செல்வசிகாமணி உட்பட கலாசார மத்திய நிலையத்தின் வளவாளர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

(பாறுக் ஷிஹான்)

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.