கொரோனா தொடர்பாக ரணில் கருத்து !

கொரோனா பரவல் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் முடிவுக்கு வரும் எனவும் ஆனால் அதன்பிறகு கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் அது கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீன்பிடி துறைசார் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடும் எனவும் அதனால் PCR இயந்திரங்கள் அதிகம் தேவை எனவும் ரணில் விக்ரமசிங்க கடந்த மார்ச் மாதத்தில் கூறிய நிலையில் சுமார் 7 மாதங்களின் பின் அது உண்மையாகவே நடந்துள்ளது.

 

இரண்டாம் அலை கொரோனா டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என ரணில் விக்ரமசிங்க தனது நெருங்கிய நபர்களிடம் கூறியுள்ளார். அதேபோன்று மூன்றாம் அலை உலக அளவில் ஏற்படும் என்றும் அது இலங்கையை பாதித்தால் நாடு கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இப்போதே அதனை தடுக்க தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தான் தற்போது அரசியலில் இருந்து சற்று ஓய்வுபெற்றிருந்தாலும் இவ்விடங்கள் குறித்து அவதானித்து வருவதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்காலம் குறித்து கூடிய கவனம் செலுத்தி அதிகாரிகள் செயற்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.