திருகோணமலை மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 10.6 மில்லியன் ரூபாய் நிதி- மாவட்ட அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு  10.6 மில்லி மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (06)  பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 61 குடும்பங்களைச் சேர்ந்த 3810 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்குரிய நிதியினை ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கு ம் அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின்படி அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று உலர் உணவு பொருட்களை வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வீ.பிரேமானந் அவர்களினால் வழங்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நாளை சனிக்கிழமை முதல் திருகோணமலை பொது மீன் சந்தை சுகாதார வழிமுறைக்கு அமைவாக திறக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் மாவட்டத்தின் இயல்புநிலை கெடாத வகையில் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக பொதுமக்கள் செயற்பட வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரள பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.