பூநகரி பிரதேச சபையின் செயலாளரின் அதிகாரங்களை மீளப் பெற்றுக் கொண்ட தவிசாளர்

பூநகரி பிரதேச சபையின் செயலாளரின் அதிகாரங்களை தனக்குள்ள அதிகார தத்துவங்களின் அடிப்படையில் தான் மீளப் பெற்றுக் கொள்வதாக சபையின் தவிசாளர் ஐயம் பிள்ளை அவர்கள் செயலாளர் கம்சநாதன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

பூநகரி பிரதேச சபையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் சபையின் செயலாளரான கணேசன் கம்ஸநாதன் அவர்கள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுடன் தொடர்ச்சியாக முரண்பட்டு வரும் அதேவேளை மக்கள் நலனுக்குப் புறம்பாக தனது அதிகாரங்களை பிரயோகித்து வருவதாகவும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம்  அவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சபையின் தவிசாளர் அருணாசலம் ஐயம்பிள்ளை அவர்களால் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், சபை சார்ந்த நடவடிக்கைகளுக்கு தங்களது செயற்பாடுகள் ஆரோக்கியமற்றதாக உள்ளதாலும், தங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென்று 2020.09.14 ஆம் திகதிய சபை அமர்வில் கலந்து நிறைவேற்றப்பட்டுள்ள 17 ஆம் இலக்க தீர்மானத்தின் படியும், 1987 ஆம் இலக்க 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு.8-2 இன் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையிலும் தங்களுக்கு என்னால் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் மீளப்பெறப்படுவதாகவும், தனது அங்கீகாரமின்றி சபையின் சொத்துக்களை பயன்படுத்துவதும், மேற்படி தத்துவங்களை பிரயோகிப்பதும் சட்ட விரோதமானதாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சபையின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டுள்ள  இக்கடிதம் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பிராந்திய உள்ளூரர்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டு ஈஎஅனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை மக்கள் தங்கள் சேவைகளை தவிசாளர் மற்றும் உபதவிசாளருடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும். எனவும் சபையின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.