வெள்ளத்தில் மூழ்கிய மக்களின் பல ஏக்கர் காணிகள் ; ஆலையடிவேம்பு முகத்துவாரம் தோண்டப்பட்டது.

ஆலையடிவேம்பு  பிராந்தியத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் பலஏக்கர் காணிகள் அண்மையில் பெய்துவரும் மழை காரணமாக  வெள்ளத்தில் மூழ்கிதை அடுத்து வெள்ளத்தை அப்புறப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் திருக்கோவில் பிரதேச சபை இயந்திரங்களை கொண்டு இன்று காலை ஆலையடிவேம்புசின்ன முகத்துவாரம் தோண்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட வழி ஏற்படுத்தப்பட்டது.
அக்கரைப்பற்று பிராந்திய விவசாய விரிவாக்கல் காரியாலய அதிகாரி யூ. எல். ஹமீட் தலைமையில்
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்,  அலையடிவேம்பு பிரதேச செயலாளர், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் போன்றோரின் ஆலோசனை மற்றும் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வேலை திட்டத்தை அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஏம்.ஏ. றாசிக் களத்தில் நின்று வழிநடத்தினார்.
பிரதேச விவசாய அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இவ்வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
( நூருள் ஹுதா உமர்)   

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.