யாழ் மாவட்டத்தில் இவ் வருடம் விவசாய செய்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !

யாழ் மாவட்டத்தில் இவ் வருடம் விவசாய செய்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக யாழ் மாவட்ட விவசாய குழுவின் தலைவரும் மாவட்ட அரச அதிபருமான க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற யாழ் மாவட்ட விவசாய குழு கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்
.
யாழ் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த விவசாய குழு கூட்டத்தில் யாழ் மாவட்டத்திற்கான விதைப்பு திகதி பற்றிய ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி விதைப்பு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை தற்பொழுது நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உர விநியோகத்திற்கான அனுமதியும் இன்றைய விவசாய குழு கூட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளது
இதனைவிட உருளைக்கிழங்கு மானியம் யாழ் மாவட்டத்திற்கு 130 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு நடுகை செய்தற்குரிய மானியம் சுமார் 63 மில்லியன் கிடைத்திருக்கின்றது.
யாழ் மாவட்ட விவசாயிகள் அரசினுடைய திட்டத்தின் மூலம் நன்மை பெற இருக்கின்றார்கள் உருளைக்கிழங்கு விநியோகம் இந்த மாத இறுதியில் துரிதமாக உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்காவைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல விவசாய நடவடிக்கைகளுக்கான உர விநியோகமும் தற்பொழுது மிகவும் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றது இந்த நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுடைய பிரதிநிதிகள் மிகவும் திருப்தியினை வெளியிட்டிருந்தார்கள்
மேலும் மாகாண விவசாயத் திணைக்களம் மாவட்ட விவசாயத் திணைக்களம் உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயற்படுகிறார்கள்.
விவசாய அமைச்சு தேவையான நடவடிக்கையை ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.
யாழ் மாவட்டத்தில் இந்த தடவை விவசாய செய்கையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது விவசாய செய்கை பண்ணும் ஏக்கரும் அதிகரித்திருக்கின்றது.
அதற்குகாரணம் தற்போதைய அரசாங்கத்தினால்அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மானிய திட்டங்கள் ஆகும் மேலும் வெளிநாட்டு இறக்குமதியினை அரசாங்கம் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உள்ளூர் உற்பத்தி வாய்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது ஆகவே இந்த திட்டங்கள் ஊடாக எங்களுடைய மாவட்ட விவசாயிகள் உச்ச பயனை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்..
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் பிரதேச செயலர்கள், மாகாண விவசாய திணைக்களத்தினர், கமநல சேவைத் திணைக்களத்தின் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் ஏனைய விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.