வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு டெங்கால் துரித நடவடிக்கை

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு டெங்கு நோய் பரவல் ஏற்பட்டதன் காரணமாக சுற்றுச் சூழல் சீரின்மையால் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (18)புதன்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு டெங்கு நோய் பரவல் ஏற்பட்டதன் காரணமாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரங்கா ராஜபக்ஷ குறித்த விடயம் தொடர்பில் சமூகநல செயற்பாட்டாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மிலிடம் கலந்துரையாடியதன் நிமித்தம்சுற்றுச் சூழல் துப்பரவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது வைத்தியசாலையின் பின் பகுதிகளில் காணப்பட்ட குப்பைமேடுகள் அகற்றப்பட்டு, கழிவு நீர்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர்கள் வடிந்தோடும் வகையில் வடிகாண்கள் வெட்டப்பட்டு, உட்புற சூழல் பகுதிகள் சீர்செய்து கொடுக்கப்பட்டது.

குறித்த வேலைத் திட்டத்தில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரங்கா ராஜபக்ஷ, சமூகநல செயற்பாட்டாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது மழை பெய்து வருவதுடன், கல்குடாப் பிரதேசத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதுடன், டெங்கு நோய் தாக்கம் காரணமாக வரும் நோயாளர்களின் பாதுகாப்பு கருதி துரித வேலைத் திட்டம் இடம்பெற்றது.

 

 

 

 

 

 

(ந.குகதர்சன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.