காரைதீவில் ராஜபக்ஸக்களுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு ;சாதனை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவம்

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் ஒரு வருட கால பதவி நிறைவு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் 75 ஆவது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர் ஊடகவியலாளர் த. தர்மேந்திராவின் ஏற்பாட்டில் பெரமுனவின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் பி. ரி. தர்மலிங்கத்தின் தலைமையில் காரைதீவு ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நேற்று புதன்கிழமை மதியம் இடம்பெற்றன.

நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. எல். எம். நக்பர், காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம். சி. எம். காலித், கவிஞர் காரையன் கதன் ஆகியோர் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்டதுடன் பொதுஜன பெரமுனவின் அம்பாறை கரையோர மாவட்ட செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
கவிஞர் காரையன் கதன் சிறப்பு கவிதை வழங்கினார். விசேட நிகழ்வாக நடந்து முடிந்த புலமை பரிசில் பரீட்சையில் முதனிலையில் சித்தி பெற்ற ஒரு தொகை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து கொரோனா தொற்று பரம்பலை ஒழிப்பதற்கான விழிப்பூட்டல் நிகழ்வாக டாக்டர் நக்பரால் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற சுவ தாரிணி  ஆயுர்வேத பானம் வழங்கி வைக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.