திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கும் தொற்று நீக்கும் பணிகள்…..

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் தொற்று நீக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட ஊழியர்கள் சென்று தொற்று நீக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் போது முகக் களை பயன்படுத்துமாறும் கைகளை கழுவும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றுமாறும் அறிவித்தல் வழங்க வேண்டுமெனவும் பெற்றோர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தில் எங்கு அதிகளவில் பரவி வருவதினால் பாடசாலை மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் சிறார்களை அதிகளவில் டெங்கு நுளம்பு தாக்குவதால் பாடசாலை சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.