வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பம்..

வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மூன்றாம் தவணை க்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (23) ஆரம்பமாகின.

தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு இன்று ஆரம்பமாயிருந்தது.

அதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்