மட்டக்களப்பு -மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விசேட அமர்வு இன்றைய தினம் (23) சபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.

சபையின் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் கலந்துகொண்டிருந்த இன்றைய அமர்வில் 2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வித எதிர்ப்புகளுமின்றி அனைத்து உறுப்பினர்களின் கட்சி பேதமின்றிய ஏகோபித்த ஆதரவுடன் இவ்வரவு செலவுத் திட்ட அறிக்கை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

16 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 07 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 01 உறுப்பினரும், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிபப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்