சவளக்கடை குட் லக் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு மர நடுகை நிகழ்வு…

(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை சாளம்பைக்கேணி-02 குட் லக் விளையாட்டுக் கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 6ம் கிராமம் பிலால் ஜூம்மா பள்ளிவாசல் முன் முகப்பு பிரதேசத்தினை அழகுபடுத்தும் நோக்குடன் மர நடுகைத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

குட் லக் விளையாட்டு கழகத்தின் தலைவர் வை.பாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ( திட்டமிடல்) எஸ்.எம்.ஹைதர் அலி, 6ம் கிராமம் பிலால் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.நஜிமுத்தீன், சாளம்பைக்கேணி-02 கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் யு.எல். தெளபீக், குட் லக் விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் எஸ்.ஐ.எம்.முபீன், பிலால் ஜூம்மா பள்ளிவாசல் செயலாளர் மெளலவி எம்.எம்.முபாரீஸ், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.