இன்றைய வானிலை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத்தொகுதியானது மேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையைநோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுஅடுத்த சில நாட்களுக்கு நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் வானிலையில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கு கிழக்காக உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம்கூடிய கடற்பரப்புகளில் (05N –12N> 85E –95E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழைநிலைமை:
காங்கேசந்துறை யிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல்நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல்மிதமான அலையுடன் காணப்படும். காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக் காணப்படும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.