திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான விழிப்புணர்வு !

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை உலகறியச்செய்யும் 16 நாட்கள் செயற்திட்டத்தை அனுஷ்டிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இன்று (09) திருகோணமலை  கலாச்சார மண்டபத்தில் விஷேட நிகழ்வொன்றை முன்னெடுத்திருந்தது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி .ஜெ.ஜெ.முரளிதரன், சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர் திரு.சிறீதரன் மற்றும் ஏனைய விருந்தினர்களாக திருகோணமலை பிராந்திய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொருப்பதிகாரி திருமதி ஜஸ்மின் ராணி, சுகாதார பணிமனை சிரேஷ்ட பெண்மாது திருமதி கலைச்செல்வி மற்றும் கொரோனா தடுப்பு பிரிவு பொலிஸ் பொருப்பதிகாரி கயஷான் அக்ரொம்பட ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை தடுக்கும் உத்திகள் எனும் தலைப்பில் சிறு கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளை பெண்கள் வலையமைப்பு நடாத்தி அதன் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு, தெரிவு செய்யப்பட்ட சித்திரங்கள் கண்காட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பாடசாலை மாணவர்கள் நிகழ்விற்கு அழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பாடசாலைகளில் சுகாதார குழுக்களை ஒழுங்கமைக்கும் பிரேரணைகள் வலையமைப்பால் முன்வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவிகளுக்கான சுகாதார பொதிகள் மற்றும் சுகாதார சாதனங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.