யாழில் தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கி வைப்பு…

அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் அடிப்படையில் வருடாந்தம் வீடற்றவர்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கு இந்த வீட்டு திட்டத்தினை வழங்கி அவற்றை தொடர்ச்சியாக வருடந்தோறும் செயற்படுத்தப்படுகிறதுகுறித்த திட்டமானது 2020ஆம் ஆண்டு ஐந்தாம் கட்டமாக அமுல்படுத்தப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் 345 வீடுகளிலே 46 குடும்பங்களை தவிர்ந்த அனைத்து கிராமங்களும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு அடுத்த வருடமும் இதே மாதிரியான ஒரு நடைமுறை செயற்படுத்தப்பட இருக்கின்றது. அதற்குரிய முன்னேற்ற நடவடிக்கைகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த வீட்டுத்திட்டத்திற்கு வழங்கும் 6 லட்சம் ரூபா பணமானது தங்களுடைய அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. எனினும் மக்கள் சற்று விரிவாக்கி கொள்ளும்போது பணம் போதாது காணப்படுகின்றது.ஆகவே அடிப்படை தேவைகளை நீங்கள் முதலில் பூர்த்தி செய்த பின்னர் வீட்டினை விரிவாக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்திலே தேசிய வீடமைப்பு அதிகாரசபையிடம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்.

தீவுப்பகுதி மக்கள் ஏனைய பிரதேசங்களை விட செலவு அதிகமாக காணப்படுகின்றது. அதாவது மணல் மற்றும் ஏனைய கட்டட பொருட்களை பெறுவதற்கான செலவு தீவு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.எனவே தீவு பகுதி நிலைமையும்சற்று வித்தியாசமானது.எனவே அவர்களுக்கு அந்த தொகையை கொடுக்கும் போது மேலதிகமான கொடுப்பனவு ஏதாவது கொடுப்பதற்கு நடவடிக்கையினை திணைக்களம் எடுக்கவேண்டும்.

குறித்த விடயத்தினை அமைச்சுக்கு தெரியப்படுத்தி கொள்கை அளவில் அதனை செயற்படுத்த வேண்டும். குறிப்பாக நெடுந்தீவு, எழுவைதீவு, அனலைதீவு போன்ற தீவு பகுதிகளுக்கு குறித்த தொகையினை அதிகரித்து கொடுத்தால் மக்கள் சரியாக அந்த திட்டத்தை நடைமுறைப் படுத்திக் கொள்ள முடியும் எனவும்,

கடந்த வாரம் தீவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனையை என்னால் நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எனவே தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் ஏனைய இந்த தொடர்பான அமைச்சர்களுக்கு இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம். அதே நேரத்தில் இன்னொரு விடயத்தினை தெரியப்படுத்த வேண்டும்.

46 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வீட்டினை பெறாதுள்ளார்கள் அவர்களின் கோரிக்கை இந்த தொகை போதாது எனவும் அதிகரித்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் அதனை ஏற்க மறுக்கிறார்கள். எனினும்,அதற்கு இன்றுவரை மக்கள் மத்தியில் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனவே தேசிய வீடமைப்பு அதிகார சபையானது அதன் கொள்கையின்படி தான் செயற்பட முடியும். எனவே பொதுமக்கள் கிடைக்கின்ற இந்த பணத்தை வைத்து தமக்கு அடிப்படையாகத் தேவைப்படுகின்ற இருப்பிட தேவையினை பூர்த்தி செய்த பின்னர் தமது மேலதிக விசாலமான தேவையினை செயற்படுத்திக் கொள்ளவேண்டும் என அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.