காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட  மாளிகைக்காடு கிழக்கு பகுதியில்   05 பேருக்கு கொரோனா தொற்று ; சுகாதார துறையினரின் கட்டுப்பாட்டுக்குள்…

அம்பாறை- காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட
மாளிகைக்காடு கிழக்கு பகுதி  சுகாதார துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாளிகைக்காடு பகுதியில் 25 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி .சி .ஆர் பரிசோதனையில் 05 பேர்
கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர் மேலும் இவர்கள் நடமாடிய பகுதிகளை

உள்ளடக்கியே இக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ஜீவரானி தெரிவித்தார்.

மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு அமைய மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்