மேலும் 100 பேர் இன்று நாடு திரும்பினர்..
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி சிங்கப்பூரில் இருந்து 8 பேரும் சவுதி அரேபியாவில் இருந்து 50 பேரும் கட்டார் தோஹா நகரில் இருந்து 42 பேரும் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்.
இதேவேளை நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள் அனைவரும் கட்டு நாயக்க விமான நிலையத்தில் உள்ள கொழும்பு தனியார் வைத்தியசாலை பணியாளர்களினால் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை